நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்
தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது
” இந்த நாட்டை அடி பாதாளத்துக்குள் தள்ளிய ராஜபக்ஷாகளுக்கு பிரதான பாதுகாவலராக இந்த நாட்டின் ஜனாதிபதி இருந்து வருகிறார்.
நான் இந்த ஜனாதிபதி கதிரைக்கு மக்களின் வாக்குகளாலே தெரிவு செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் உரிமையாளராக அன்றி தற்காலிக பொறுப்பாளராக பொது மக்களின் சேவகனாக இருந்து திருடர்களால் திருடப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.