தலதா மாளிகைக்கு சென்ற சஜித்
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ தலதா மாளிகைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
தலதா மாளிகைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவரை தியவடன நிலமே உள்ளிட்ட விகாரை பஸ்நாயக்க நிலமேமார்கள் வரவேற்று ஆசி வழங்கினர்.