அரச வங்கி ஊழியர்கள் போராட்டம்.
நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து சம்பள உயர்வைக் கோரி அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டது.
எமது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச வங்கி ஊழியர்களுக்கு வரிச்சுமைக்கு ஏற்ற சம்பளம் ஒன்றை உடன் பெற்றுத்தருக, ஏனைய அரச ஊழியர்கள் போல் எங்களுக்கு அனைத்து சலுகைகளும் பெற்று தாருங்கள் , அரச வங்கிகளின் சம்பள அதிகரிப்பை உடன் உயர்த்துங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே அரசாங்கம் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க விட்டால் நாடு முழுவதும் சென்று பாரிய போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.