விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை போற்றிய கல்வி அமைச்சர் !
லைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருபோதும் பாடசாலையை மூடுவதற்கு இடமளிக்கவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் எந்தப் பரீட்சைக்கும் இடையூறு செய்யவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், தற்போது தொழிற்சங்கங்கள் அதற்கு அப்பால் சென்று எதிர்கால சந்ததியினரை அடகு வைத்து தொழில் உரிமைகளை வென்றெடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
தொழில்முறை உரிமைகளை வென்றெடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் எதிர்கால சந்ததியினர் தொழில்முறை உரிமைகளை வென்றெடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாணவர் சங்க வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக அலரி மாளிகையில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிலர் பாடசாலைகளை மூடிவிட்டு தொழில் உரிமைகளை கோரி போராட்டங்களை முன்னெடுத்து வந்தாலும், பல வருடங்களாக போராடிய வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருபோதும் பாடசாலையை மூடுவதற்கு இடமளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.