பௌத்தமயமாக்க – தந்திரிமலையில் ரணில்!
வடகிழக்கில் பௌத்த மயமாக்கலை முன்னெடுத்துவரும் தந்திரிமலை விகாராதிபதியினை ரணில் சந்தித்துள்ளார்.பொசன் உற்சவத்தை முன்னிட்டு அவர் நேரில் தந்திரிமலைக்கு பயணித்து சர்ச்சைக்குரிய பிக்குவிடம் ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
பொசான் பௌர்ணமியை முன்னிட்டு தந்திரிமலை ரஜமஹா விகாரையின் பூஜை நிகழ்வுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார்.
இன்று பிற்பகல் தந்திரிமலை ரஜமஹா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதியை, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உப பிரதான சங்கநாயக, தந்திரிமலை ரஜமஹா விகாரிபதி வண, தந்திரிமலை சந்தரதன தேரரைச் சந்தித்து நலம் விசாரித்ததன் பின்னர் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் தீபங்கள் ஏற்றி வைத்து தந்திரிமலை பூஜை நிகழ்வுகள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதேவேளை, பொசான் பௌர்ணமியை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க தந்திரிமலை புனித பூமிக்கு வருகை தந்திருந்தவர்களை ஜனாதிபதி நேரில் சென்று சந்தித்ததுடன் அவர்களிடம் தகவல் கேட்டறிந்துகொண்டதுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்