600 பலூன்களை மீண்டும் தென்கொரியாவுக்குள் அனுப்பியது வடகொரியா!
வடகொரியா ஒரே இரவில் 600 குப்பைகள் நிரப்பப்பட்ட இராட்தச பலூன்களை தென்கொரியாவுக்குள் அனுப்பியது என்று தென்கொரிய இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சிகரெட் துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் நிரப்பப்பட்ட பலூன்கள் நேற்று சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை தொடர்ச்சியாக அனுப்பியது.
சியோல் மற்றும் கியோங்கி உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் தரையிறங்கும் பலூன்களை கண்காணித்து சேகரித்து வருவதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கொரியாவின் ஜனநாயக மக்கள் குடியரசு (DPRK) என்று முறையாக அறியப்படும் வட கொரியா, இந்த வார தொடக்கத்தில் குப்பைப் பைகளை சுமந்து கொண்டு நூற்றுக்கணக்கான பலூன்களை அனுப்பத் தொடங்கியது. DPRK இந்த குப்பை மற்றும் கழிவுகள் நிரப்பப்பட்ட பலூன்களை „உண்மையின் பரிசுகள்“ என்று அழைத்தது.