சீனாவின் விண்கலம் நிலவின் எய்ட்கன் பகுதியில் தரையிறங்கியது!

கடந்த மே 3 ஆம் திகதி சீனாவினால் அனுப்பப்பட்ட Chang’e-6 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளது என இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்தது.
விண்கலம் தென்துருவத்தின் எய்ட்கன் பேசின் (Aitken) என அழைக்கப்படும் பொிய பள்ளத்தில் தரையிறங்கியது. மண் மற்றும் பாறைகளை பிரித்து 3 நாட்கள் ஆய்வுசெய்யவுள்ளது. லேண்டரானது 2 கிலோ கிராம் வரையான நிலத்தடி மண் மற்றும் பாறைகளை சேகரித்து நிலவைச் சுற்றிவரும் காப்ஸ்யூலில் திருப்பி பூமிக்கு அனுப்பி வைக்கும்.
சேகரிக்கப்பட்ட பொருட்கள் சந்திரன் எவ்வாறு உருவானது அல்லது கிரகங்கள் எவ்வாறு உருவானது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
2003 ஆம் ஆண்டில் சீனா தனது முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டது. சீனா விண்வெளியில் விண் நிலையத்தைக் தனக்குக் கட்டியுள்ளது. முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு தனது சொந்த வளங்களைப் பயன்படுத்தி ஒரு நபரை விண்வெளிக்கு அனுப்பிய மூன்றாவது நாடு ஆனது.
செவ்வாய் மற்றும் சந்திரனில் ரோபோ ரோவரை தரையிறக்கியுள்ளது. சீனா 2030 ஆம் ஆண்டளவில் சந்திரனுக்கு ஒரு குழுவினரை அனுப்பவுள்ளது. அதே ஆண்டில் செவ்வாய் கிரகத்திலிருந்து மாதிரிகளை மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.