மறக்கவும் மாட்டோம்… மன்னிக்கவும் மாட்டோம்!
சிங்கள அரசால் ஈழத்தமிழர்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிகப்பட்ட நாள் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை தினமாகும்.
20009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி , இலங்கையை மட்டுமல்லாது முழு உலகையுமே உலுக்கிய சம்பவம் முள்ளைவாய்க்கால் படுகொலை சம்பவம். இறுதிக்கப்பட்ட போரில் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிய சிறிலங்கா அரசபடைகள் , பெண்களையும் குழந்தைகளையும் கூட விட்டுவைக்கவில்லை.
முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தின் 15 ஆவது ஆண்டு
ஊடகவியலாளர் இசைப்பிரியாவிற்கு நேர்ந்த கொடுமை உலகில் வேறெந்த பெண்ணுக்கும் நேர்ந்திருக்காது.
விடுதலைப்புலிகளின் தவைவர் பிரபாகரன் மகனான பாலகன் பாலச்சந்திரன் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டமை ஈழதமிழர்கள் நெஞ்சங்களில் இரத்தக் கண்ணீரை வரவழைத்திருந்தது.
இறுதிப்போரில் இலங்க இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளை தேடி 15 ஆண்டுகளாக எம் மக்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றார்கள். சர்வதேசமே நீதி கூறு என கேட்டும் அவர்களின் கூக்குரல் யார் செவிகளையும் இன்னும் எட்டவில்லை போலும்.
தாயகத்தில் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நாளை முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தின் 15 ஆவது ஆண்டாகும். தமிழர் தேசத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் கதவடைப்பு செய்து அனைத்து மக்களும் பேதமின்றி கலந்துகொண்டு எம் உணவுர்களை வெளிப்படுத்துவோம் என தமிழ் தேசிய அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.