புடினுக்கு மாபெரும் வெற்றி: மீண்டும் அதிபரானார்!!
ரஷ்யாவில் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் என்பதை முடிவுகள் காட்டுகின்றன.
12 மணி நேர வேறுபாடுகளைக் கொண்ட ரஷ்ய நிலப்பரப்புக்குள் கடந்த மூன்று நாட்கள் தேர்தல் நடைபெற்றது.
புடின் 87 சதவீத வாக்குகளைப் பெற்றதாக ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன.https://www.youtube.com/embed/T0QbTd_hKIY?si=4_V0wDj5tqKrZPDr ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையத்தின்படி, அவர் 87 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கம்யூனிஸ்ட் வேட்பாளர் நிகோலாய் கரிடோனோவ் 4 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், புதிய வேட்பாளரான விளாடிஸ்லாவ் டாவன்கோவ் மூன்றாவது இடத்தையும், தீவிர தேசியவாதி லியோனிட் ஸ்லட்ஸ்கி நான்காவது இடத்தையும் பிடித்தனர்.
தேர்தல் முடிவடைந்தபோது நாடு முழுவதும் 74.22 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இது 2018ஆம் ஆண்டு 67.5 சதவீதத்தையும் தாண்டியுள்ளது.
முன்னாள் சோவியத் ரஷ்யாவின் உளவாளியான லெப்டினன்ட் கேணலான புடின் 1999 ஆம் ஆண்டு முதல் முதலில் அரச அதிகாரத்தில் பதவிக்கு வந்தார்.
கடந்த 200 ஆண்டுகள் கொண்ட ரஷ்ய வரலாற்றில் சோவியத் ரஷ்யாவில் ஆட்சியிலிருந்த ஜோசப் ஸ்டாலினை பின்னுக்குத் தள்ளி நீண்ட காலம் ஆட்சியில் இருந்த ஒரு தலைவர் என்ற இடத்தை புடின் பெறுகிறார்.
புடினின் ஆட்சி இனிவரும் ஆறு ஆண்டுகள் நீடிப்பார். அவ்வாறு அவர் ஆட்சியில் இருக்கும் பட்சத்தில் கால் நூற்றாண்டு ஆட்சியில் இருந்த தலைவர் என்ற இடத்தைப் பெறுவார்.
இந்த வாக்கெடுப்பு சுதந்திரமானதோ அல்லது நியாயமானதோ அல்ல என்று அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் தங்கள் உத்தியோகபூர்மான ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.