ஹவுதிப் போராளிகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை!!
ஏமனில் உள்ள ஹவுதி போராளிகள் தங்களிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இருப்பதாகக் கூறியுள்ளனர்.
திட எரிபொருளில் இயங்கும் இந்த ஏவுகணை மக் 8 வேகத்தில் சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்றும் இதனை ஏற்கனவே வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாகவும் ஹவுதி போராளிகளுக்கு நெருக்கமான இராணுவ அதிகாரி ஒருவர் ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.
இந்த ஏவுகணைகளை ஹவுதிகள் பயன்படுதினால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட அதன் நட்பு நாடுகளால் பயன்படுத்தப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மிகவும் வலிமையான சவாலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா தாக்குதல்களுக்காகவும், இஸ்ரேலில் உள்ள இலக்குகளை இலக்கு வைக்கவும் ஹவுதிகள் இந்த ஏவகணையை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றனர் என்று அந்த அதிகாரி மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.