இந்திய அல்வா அவியாது!
இந்திய அரசு தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் தொடர்ந்தும் உறவுகளை பேணிவருவதாக காண்பித்து வருகின்ற போதும் பின்கதவு அரசியலில் இலங்கைக்கு தொடர்ந்தும் இராணுவ உதவிகளை சீனா வழங்கியே வருகின்றது.
இலங்கையில் இராணுவதளத்தை அமைக்க சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க எச்சரித்துவருகின்றது.
எனினும் சீன கப்பல்கள் இலங்கை வருவதை தடுப்பதில் இந்திய அழுத்தங்களை பிரயோகித்தே வருகின்றது.
இந்நிலையில், இலங்கைக்கு இராணுவ உதவிகளை சீனா வழங்குவது தொடர்பான ஒப்பந்தமொன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதற்கமைய, 28 வெடிபொருள் அகற்றும் ரோபோ இயந்திரங்கள், 10 வெடிக்கும் பொருட்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான உபகரணங்கள் மற்றும் 10 வெடிப்புகளிலிருந்து தற்பாதுகாப்பதற்கான தாங்கிகள் மற்றும் வாகனங்கள் சீன இராணுவத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.
சீன இராணுவத்தின் உதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்த இராணுவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய போது பல கடனுதவிகளை வழங்கிய சீனா, தற்போது இராணுவ உதவிகளை தொடர்ந்தும் வழங்க முன்வந்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.