நாட்டில் புகையிலை பாவனையால் தினசரி 50 மரணங்கள் பதிவு!
நாட்டில் புகையிலை பாவனை காரணமாக தினசரி 50 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை சுட்டிக்காட்டியே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் பதிவாகும் மரணங்களில் 83 சத வீதமானவை தொற்றா நோய் காரணமாக ஏற்படுபவை.
தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான 4 காரணங்களில் புகையிலை பாவனை பிரதான காரணமாக காணப்படுகிறது.
இலங்கையர்கள் புகைப்பிடிப்பதற்காக மாத்திரம் தினசரி 520 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
நாட்டில் சிகரெட் பாவனையாளர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் நாட்டில் உள்ள சிகரெட் பாவனையாளர்களின் மொத்த எண்ணிக்கை 1.5 மில்லியன் ஆகும்.
இந்நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் பல்வேறு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டும் அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என அவர் தெரிவித்தார்.