புர்கினா பாசோ, மாலி, மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் ஈகோவாஸ் அமைப்பிலிருந்து வெளியேறின
ஆபிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பான ஈகோவாஸ் (ECOWAS) அமைப்பிலிருந்து உடனடியாக வெளியேறுவதாக புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன.
இந்த மூன்று நாடுகளிலும் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், குறித்த நாடுகளின் இராணுவத் தலைவர்கள் இந்த அமைப்பிலிருந்து உனடியாக வெளியேறுவது என்பது இறையாண்மையின் முடிவு என்று அறிக்கையை வெளியிட்டனர்.
2023 ஆண்டில் நைஜரும், 2022 ஆண்டில் புர்கினா பாசோவும், 2020 ஆண்டு மாலியிலும் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகள் நடந்தன.
இந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெற்ற பின்னர் ஈகோவாஸ் அமைப்புடன் தொடர்சியான பதட்டமான உறவுகளை இந்நாடுகள் கொண்டுள்ளன.
ஈகோவாஸ் அமைப்பு மேற்குலக நாடுகள் தங்கள் நலன்களைப் பேணுவதற்காக அவர்களில் நிதிப்பங்களிப்புடன் உருவாக்கப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.