November 21, 2024

பாரிசை முற்றுகையிடும் போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்!!

விவசாயத் தொழிலாளர்கள் சிறந்த ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைக் கோரி நாடு தழுவிய போராட்டங்களின் ஒரு பகுதியாக, பாரிசை முற்றுகையிடும் போராட்டத்திற்கு பிரான்சின் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த வாரத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து  நெடுஞ்சாலைகளில் சாலைத் தடுப்புகளை அமைத்துள்ளனர். உள்ளூராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட சொத்துக்களையும் வீதிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை பாரிகுச் செல்லும் அனைத்து சாலைகளையும் முடக்கி போராட்டத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பாரிஸுக்கு அருகிலுள்ள ருங்கிஸ் உணவுச் சந்தையை குறிவைக்கவும் சில விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்தன.

விவசாயிகளின் வாகனங்கள் மற்றும் டிராக்டர்களில் தலைநகருக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் பாரிசைச் சுற்றி வளைப்பதே தங்களின் நோக்கம் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

ருங்கிஸ் மற்றும் பாரிஸ் ரோய்சி விமான நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பை அதிகரித்து வருவதாக பாரிஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. கவச வாகனங்களுடன் காவல்துறையினர் ருங்கிஸ் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

எந்த டிராக்டரும் பாரிஸுக்குள் வரக்கூடாது உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறினார். 

பாரிஸ் மற்றும் அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய Ile-de-France பிராந்தியத்தில் இடையூறு ஏற்படும் என்று எச்சரித்தார். 

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 15,000 காவல்துறையினர் பயன்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Ile-de-France இல் நாளை போக்குவரத்து மிகவும் கடினமாக இருக்கும்“ என்று தர்மானின் கூறினார்.

இந்த சாலைத் தடைகளின் விளைவாக நமது பொருளாதார வளர்ச்சியில் சிறிது சிறிதளவு இழக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

ஜேர்மனி மற்றும் போலந்து உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோன்ற போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert