November 21, 2024

யாழ்.மாவட்டம் உள்ளிட்ட நான்கு மாவட்டத்தில் காற்றில் அதிக மாசு

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

காற்று மாசு காரணமாக சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் மற்றும் அதனுடன் தொடர்படைய நோய் நிலைமைகள் உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

„நமது நாட்டின் வழியாக, குறிப்பாக வங்காள விரிகுடா போன்ற பிற நாடுகளின் வெளிப்பகுதிகளில் இருந்து வரும் காற்றே  இதற்கு காரணமாகும்.

காற்றுடன் வரும் பல்வேறு வகையான காற்று மாசுபாடுகளால், நாட்டின் காற்றின் தரம் குறைந்துள்ளது.

இந்த நிலை பொதுவாக மிகவும் சிறியது மற்றும் குறைந்தபட்சம் அந்த பகுதிகளில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

குறிப்பாக இந்த பகுதிகளில் ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தமான கோளாறுகள் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு வகையில் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக முககவசங்களை அணிந்தால், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். இந்த நிலை படிப்படியாக குறைந்து இன்னும் சில நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்புகிறோம்.

வளிமண்டலத்தின் நிலையைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு நாங்கள் குறிப்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert