ரணிலின் சாதனை:எட்டு இலட்சம் குடும்பங்கள் இருளில்!
இலங்கையில் மின்கட்டணம் செலுத்தாதமையினால் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான வசதிகளை வழங்குவதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை தமது பொறுப்பைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறு கோரப்பட்;டுள்ளது.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய மின் கட்டணத்தை, செலவுக்கு ஏற்ற வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தில் இன்று (08) வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களில் இலங்கை மின்சார சபை 52 பில்லியன் ரூபாய் பாரிய இலாபத்தை ஈட்டியிருக்கிறது.
அதேவேளையில், இலாபம் நாட்டின் மின்சார நுகர்வோருக்கு நிவாரணமாக வழங்கப்படாமை,மின் கட்டணம் அதிகப்படியாக அதிகரிக்கப்பட்டதால் மின்கட்டணத்தைச் செலுத்த முடியாத 8 இலட்சம் மின் நுகர்வோரின் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கால் செய்துள்ளார்