விலை அதிகரிப்புடனேயே புத்தாண்டு விடிந்தது!
புத்தாண்டில் எரிபொருட்களது விலை அதிகரிப்புடன் இலங்கை குடிமக்கள் தமது வாழ்வியலை ஆரம்பித்துள்ளனர்.
இன்று முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லீட்டர் டீசலின் விலை 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களது விலை மடங்குகளால் அதிகரித்துள்ளது.
ஒருபுறம் புதிய ஆண்டில் அரசின் பொருட்கள் மீதான வரிகள் என்றுமில்லாத அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வரி தொடர்பில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் அலுவலகம் அறிவித்துள்ளது.
அதேவேளை நிதி இராஜாங்க அமைச்சர் வரி திருத்தம் தொடர்பில் மக்கள் சரியான புரிதலை கொண்டிருப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.