நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான் சுனாமி எச்சரிக்கை!!
ஜப்பானின் மேற்குப் பகுதிகளான பகுதிகளான இஷிகாவா, நிகாட்டா மற்றும் டோயாமா மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது ஜப்பான் வானிலை ஆய்வு மையம்.
ஜப்பான் கடலை ஒட்டிய நோட்டோ பகுதியில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் திங்கட்கிழமை தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் தாக்கப்பட்டது.
இதில் மிகப்பெரிய நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் பிற முகமைகள் தெரிவிக்கின்றன.
மேலும் மக்கள் இன்னும் வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தென் கொரிய கிழக்கு கடற்கரையில் 45 சென்டிமீட்டர் உயரம் (1.5 அடி) சுனாமி உருவாகி ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹவாயை தளமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் பின்னர் சுனாமி அச்சுறுத்தல் தற்போது பெருமளவில் கடந்துவிட்டது என்று கூறியது.
ரஷ்யாவின் தூர கிழக்குத் தீவான சகலின் அவசர சேவைகள், தீவின் மேற்குக் கரையோரம் „சுனாமி அலைகளால் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்தது.
இதேநேரம் வடகொரியாவும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.