மும்மணிகளே காரணம்!
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரே பொறுப்பு கூறவேண்டும் என்று உயர்நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பளித்துள்ளது.
தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்கள் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று(14) தீர்ப்பளித்தது.
2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எடுத்த தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்கள் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவால் தீர்மானம் ஏகமனதாக அறிவிக்கப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்த பின்னர் வர்த்தகர்களுக்கு வழங்கிய 681 பில்லியன் ரூபா வரி நிவாரணம்,தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதிக தாக்கம் செலுத்தியதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த தேசிய அறிஞர்கள் பேரவையின் உறுப்பினர்கள் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
போர் வெற்றியின் பின்னராக கொண்டாடப்பட்ட கோத்தபாய உள்ளிட்ட ராஜபக்ச தரப்பின் மீதான சிங்கள மக்களது வெறுப்பினை மீண்டும் தூண்டும் வகையில் இன்றைய தீர்ப்பு பார்க்கப்படுகின்றது.