யிலத்தமடுவில் யுத்தத்திற்கு முன்பு மக்கள் வசித்தனரா?- ஆதாரங்களை கோருகிறது ஏறாவூர் நீதிமன்றம்
மயிலத்தமடுவில் யுத்தத்திற்கு முன்பு மக்கள் வசித்தனரா?- ஆதாரங்களை கோருகிறது ஏறாவூர் நீதிமன்றம் மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில், யுத்தத்திற்கு முன்னர் 13 குடும்பங்கள் வசித்து வந்தாகக் கூறப்படும் நிலையில், அதற்கான ஆதாரங்களை ஒரு வாரகாலப் பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் உத்தரவிட்டுள்ளார்.
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பு தொடர்பில் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில், இன்றைய தினம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
தற்போது மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் குடியேறியுள்ள குடியேற்றவாசிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், 1962ஆம் ஆண்டு தொடக்கம் 1983ஆம் ஆண்டு வரை,
13 குடும்பங்கள் வசித்துவந்ததாகவும், 1983ஆம் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையினால், விடுதலைப் புலிகளால் அப் பகுதியிலிருந்த 12 பேர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஏனையோர் வெளியேறிச் சென்ற நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர், மீள குடியமர வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லாத ஆவனங்கள் யுத்த காலப்பகுதியில் காணாமல்போயுள்ளதனால் அவற்றினை அரச அதிகாரிகள் வழங்காத நிலைமை தொடர்பில், நீதிமன்றுக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்த நீதிபதி, யுத்தத்திற்கு முன்னர் 13 குடும்பங்கள் வசித்து வந்தாகக் கூறப்படும் நிலையில், அதற்கான ஆதாரங்களை ஒரு வாரகாலப் பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கை, எதிர்வரும் 10ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.