März 28, 2025

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களது போராட்டத்திற்கு கிழக்கு பல்கலைக்கழக் கலைப்பிரிவு மாணவர்கள் ஆதரவு

இன்று 02.11.2023 மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களது போராட்டத்திற்கு ஆதரவு தொிவித்து கிழக்கு பல்கலைக்கழக் கலைப்பிரிவு தமிழ் மாணவர்களால் வந்தாறுமூளை பல்கலைக்கழக வாயிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர்.
அத்துடன் அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளும் இன்றைய 49 வது பண்ணையாளர்களது போராட்டத்திற்கு வளுச் சேர்க்கும் வண்ணம் தமது ஆதரவினை தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அத்துடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன் திரு .பா..அரியநேந்திரன் மற்றும்
யோகேஸ்வரன் ஆகியோரும் மட்டு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டளர்களும் கலந்து கொண்டனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert