இலங்கையில் இம்மானுவேல் மக்ரோன்: கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவு!!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது தூதுக்குழுவினர் இலங்கை வந்தடைந்தனர்.
மைக்ரோனின் தூதுக்குழுவில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் மற்றும் வெளிநாட்டுப் பகுதிகளுக்கான இராஜாங்க அமைச்சர் ஆகியோர் அடங்குவர்.https://www.youtube.com/embed/Qtw1Hy0_o0w
பபுவா நியூகினியாவிலிருந்து பிரான்ஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் மூலம் நேற்றிரவு 11.35 அளவில், பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினர், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மைக்ரேனை தலைமையிலான தூதுக்குழுவினரை விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வரவேற்றார்.
இலங்கைக்கு பயணம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி கொழும்பில் சில மணித்தியாலங்கள் தங்கியிருக்க உள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விமான நிலையம் சென்ற நிலையில், இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையே சுமார் ஒரு மணியத்தியாமும், 15 நிமிடமும் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்திப்பின்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும், அதனைத் துரிதப்படுத்துவதற்கும் அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் இதற்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பபுவா நியூகினியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவுசெய்து, நாடுதிரும்பும் வழியில், அவர் இலங்கைக்கு வருகைதந்தார்.