மீள எழுந்த ஆலயம்!

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – மயிலிட்டி தெற்கு கட்டுவன் வீரபத்திரர் ஆலயம் புனருஸ்தானம் செய்து 1 ஆம் ஆண்டு மஹோற்சவப் பெருநாள் கொடியேற்றத்துடன் இன்று (24) ஆம் திகதி ஆரம்பமானது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அன்று பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க (இன்று ஜனாதிபதி) ஆட்சியில் கடந்த 2018 இல் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது.
h
அத்துடன் ஆலயத்தின் புனருத்தாரன வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய அரசின் நிதியுதவியும் கட்டுவன்- மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) வாழ் புலம்பெயர் மக்களின் நிதியுதவியுடன் இவ்வாலயம் புனருத்தாரனம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு (2022) இல் கும்பாபிஷேகத்துடன், இன்று (24.06.2023) இல் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகியுள்ளது