டோட்முண்ட் சிவன் ஆலய பதின்மூன்றாவது வருடாந்த திருவிழா விஞ்ஞாபனம் – 2023
அருள்மிகு சாந்தராயகி அம்பாள் சமேத சந்திரமௌலீசுவரர் ஆலய
பதின்மூன்றாவது வருடாந்த திருவிழா விஞ்ஞாபனம் – 2023
சிவனேயச் செல்வர்களே
24.06.202 தொடக்கம் 05.07.2028 வரை
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் 23.06.2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05:00 மணிமுதல் கணபதி கோமத்துடன் பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகி மறுநாள் ஆனி மாதம் பத்தாம் நாள் 24.06.2023 சனிக்கிழமை அன்று பூரம் நட்சத்திரமும் சட்டி திதியும் சித்த யோகமும் கூடிய நன்னாளில் பகல் பதினொரு மணியளவில் கொடியேற்றத்துடன் வருடாந்த திருவிழாவானது ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்களிற்கு காலை மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிசேக ஆராதனைகள் அர்ச்சனைகள் இடம்பெற்று எம்பெருமான் எழுந்தருளி திருவீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார்.
23.06.2023 வெள்ளிக்கிழமை 24.06.2023 சனிக்கிழமை
25.06.2023 ஞாயிற்றுக்கிழமை 26.06.2023 திங்கட்கிழமை
27.06.2023 செவ்வாயக்கிழமை 28.06.2023 புதன்கிழமை 29.06.2023 வியாழக்கிழமை 30.06.2023 வெள்ளிக்கிழமை 01.07.2023 சனிக்கிழமை
02.07.2023 ஞாயிற்றுக்கிழமை
03.07.2023 திங்கட்கிழமை
04.07.2023 செவ்வாய்க்கிழமை
05.07.2023 புதன்கிழமை
திருவிழாக்கால நிகழ்வுகள்
பூர்வாங்க கிரியாரம்பம். விநாயகர் வழிபாடு, கிராமசாந்தி, ஆலய சாந்தி, பிரவேச பலி
காலை 10:00 மணிக்கு அபிசேகமும் மதியம் 12:00 மணிக்கு கொடியேற்றமும் தொடர்ந்து சுவாமி உள்வீதி உலாவருதல் இடம்பெறும்.
மாலை 16:00 மணிக்கு யாக பூசையைத் தொடர்ந்து வசந்தமண்டப பூசை சுவாமி உள்வீதி வலம்வருதல். விபூதிப்பிரசாதம் வழங்குதலுடன் 20:00 மணிக்கு திருவிழா நிறைவுபெறும். குதிரைவாகனத்திருவிழா பிச்சாடனத் திருவிழா, இடபவாகனம் நாயன்மார்கள் திருவிழா, மயில்வாகனம் திருநடனத்திருவிழா, நாக வாகனம்.
மாம்பழத்திருவிழா. சுவாமி கைலாசவாகனத்தில் எழுந்தருளல் வேட்டைத்திருவிழா, குதிரை வாகனம் சப்பறத்திருவிழா
தேர்த்திருவிழா (12:00 – இரதபவனி ஆரம்பம், 16:00 – பச்சை சாற்றல் இடம்பெறும்) காலை – தீர்த்த உற்சவம்
மாலை – கொடியிறக்கம். தொடர்ந்து சண்டேஸ்வரர் உற்சவம், ஆச்சார்யார் திருவிழா. காலை 08:00 மணிக்கு பிராயச்சித்த அபிசேகத்துடன் கூடிய சிறப்பு பூசை.
மாலை 16.00 மணிக்கு பூங்காவனம், திருக்கல்யாணம், திருவூஞ்சல், சுவாமி உள்வீதி வலம்வருதல்.
Hindu Tamil Kultural Center Dortmund e.V. Kiefer str 24, 44225 Dortmund (Hombruch) T.P023172515165, Fax- 0231 72515166, மீன்னஞ்சல் : info@sivantempel-dortmund.de