மும்முனைப்போட்டி:ஏற்றுக்கொண்ட மாவை!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு மத்தியில் மும்முனைப்போட்டி எழுந்துள்ளதாக தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் அப்பதவிக்கு குறிவைத்துள்ளதாகவும், அவர்களோடு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் தலைமைப் பதவிக்கு குறி வைத்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு போட்டி நிலவுகின்றது என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தலைமைப் பதவி குறித்த நகர்வுகளில், சி.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலின் போதே களமிறங்கிவிட்டதாகவும், மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். எம்.ஏ.சுமந்திரனை நாடாளுமன்ற தேர்தலில் வெல்ல வைப்பதற்கு, சி.சிறிதரன் உதவியமைக்கான காரணமும் தலைமைப் பதவியைக் குறிவைத்ததாகவே அமைந்தது என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தலைமைப் பதவியைக் குறிவைத்து, மும்முனைகளில் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.