Dezember 3, 2024

ஊடகவியலார்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில்

படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் நாளைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்படவுள்ளது. 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 18ஆம் ஆண்டு நினைவு தினமும் , ரஜீவர்மனின் 16ஆம் ஆண்டு நினைவு தினமும் யாழ் ஊடக அமையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. 

ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு , படுகொலை செய்யப்பட்ட பின்னர்  நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert