November 21, 2024

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டுகூடத்தின் ‘வடக்கின் தொன்மக் குரல்’

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் யாழ் புதிய கச்சேரிக்கு முன்பாகவுள்ள சிதைவடைந்த பழைய கச்சேரி வளாகத்துக்குள் எதிர்வரும் சனிக்கிழமை (15) மாலை 3 மணிக்கு அகங்கனலி கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடமானது வடக்கின் சுயாதீனமான கலை, திரைப்படம், ஊடகம் மற்றும் நாடகக் கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் இயங்கிவருகிறது.

இதன் அடுத்த கட்டமாக எதிர்வரும் சனிக்கிழமை (15) அகங்கனலி கூடத்தில் ஆரம்பிக்கப்படும் ‘வடக்கின் தொன்மக் குரல்’ நிகழ்வானது கலாசார பாரம்பரியத்தைப் பற்றிய முழுமையான புரிதலுடன் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பழங்காலக் கலைகளை வெளிப்படுத்தும் தளமாக இயங்கும். இந் நிகழ்வு அனைத்து தமிழர் பாரம்பரியத்தையும் தொன்மையையும் உலகறியச் செய்யும் நோக்கோடு உருப்பெறவிருக்கும் இவ் அனகங்கனலி கலைக்கூடம் நம் தொன்மத்தை அரங்கேற்றுவதற்கான இலவச களமாக இருப்பதோடு பார்வையாளர்களும் இலவசமாகவே இந்நிகழ்வுகளைக் கண்டுகளிக்கும் சந்தர்ப்பத்தையும் வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டுகூடம் வழங்கவிருக்கிறது.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா உட்பட முக்கிய பிரமுகர்களும் வடமாகாணத்தின் பாரம்பரிய, இளம் கலைஞர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் பல விருதுகளை வென்ற ஆரோகணா அரங்கக் கல்லூரியின் ‘இராவணேசன்’ நாடகமும் இன்னும் பல கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert