மரணத்தை விரும்பும் சஜித்??
பயங்கரவாதி யாராக இருந்தாலும் தமது அரசாங்கத்தின் கீழ் மரண தண்டனை அமுல்படுத்தப்படும் என எதிர்கட்சித் தலைவர் இன்று (01) வத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;“நான் ஒன்றினை மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரையும் சட்டத்திற்கு முன் நிறுத்தி தேசிய பாதுகாப்பு பிரிவு மட்டுமின்றி சர்வதேச தேர்ச்சி பெற்ற நிறுவனங்களை தொடர்புபடுத்தி, கட்டாயம் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் நீதிமன்ற முன்னிலைக்கு கொண்டு செல்வது மட்டுமின்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதலாக இருக்கட்டும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதிகளாக இருக்கட்டும் எந்த பயங்கரவாதமாகவும் இருக்கட்டும், அதில் எனக்கு வேலையில்லை..
யாரு என்ன எப்படி இருந்தாலும் தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு நாம் கட்டாயம் மரண தண்டனையை வழங்குவோம் என உறுதியாக உள்ளேன்.
இதை சொன்னதும் ஒரு தரப்பினர் குழம்புவார்கள்.. அவர்கள் லிபரல் வாதத்திற்கு எதிராக பேசுகிறார்கள் எனவும் கூறுகிறார்கள்.. நீங்கள் லிபரல் செய்து கொண்டிருக்கும் வரைக்கும் ஒவ்வொரு பாடசாலையாக இந்நாட்டில் குடு அபிவிருத்தி அடையும், இப்போதே பரவி விட்டது.. இந்நாட்டின் குடு போதைப்பொருளை அழிக்க கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும். எமது அரசின் கீழ் இந்நாட்டினை சிங்கப்பூருக்கு நிகராக சட்டங்களை கொண்டு வருவோம் என கூறிக் கொள்கிறேன்..”