November 23, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கிலிருந்து ரணில் விடுதலை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மகேஷ டி சில்வா அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால், தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்ததுடன், தமது கட்சிக்காரர் தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சுட்டிக்காட்டினர்.

அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தற்போது வழக்குத் தொடர முடியாது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து, பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert