இலங்கைக்கு முதலீடுகளைக் கொண்டுவர பிரித்தானியத் தமிழர் நியமனம்
இலங்கைக்கு வெளிநாட்டு கண்ணையா கஜன் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பிரதிநிதிகளை நியமிக்கும் திட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கினார்.
இந்த நியமனம் இன்று (1) முதல் நடைமுறைக்கு வருகிறது. எரிசக்தி, விவசாயம், நகர்ப்புற அபிவிருத்தி, கனிம வளங்கள் ஆகியவற்றிற்காக ஐக்கிய இராச்சியத்திலிருந்து முதலீட்டாளர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர் வகிப்பார்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கண்ணையா கஜன், தற்போது பிரித்தானியாவில் வசித்துவருகிறார்.
சஃபோல்க் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் முதுமாணி பட்டம் பெற்றுள்ள கஜன், பிரிட்டனில் பல வணிகங்களின் உரிமையாளராக உள்ளார்.
பிரித்தானியாவில் கேர் இன்டர்நேஷனலுக்கான திட்ட முகாமையாளராகவும் பல்வேறு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் பிரித்தானியாவில் உள்ள லோட்டஸ் வில்லேஜ் ஹோம் கேர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஆவார்.