November 24, 2024

தாயகச்செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் நிபந்தனையுடன் அனுப்பட்டனர்

இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக...

கச்சத்தீவினை அரசியல் பிரச்சாரமாக்காதீர்கள்

கச்சதீவு எங்களுடையது அதனை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற் சங்கத்தின் வடமாகாண  இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கானது  எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த  வழக்கானது  இன்று முல்லைதீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்...

அனலைதீவில் கால் ஊன்றியது அதானியின் நிறுவனம்

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக  நிா்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.   இலங்கை...

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றைய தினம் சனிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10...

வலி. வடக்கில் உள்ள 07 ஆலயங்களுக்கு சென்று வழிபட அனுமதி – சுமார் 14 ஆலயங்களுக்கு செல்ல அனுமதியில்லை

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் 07 ஆலயங்கள் மக்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடமாகாண ஆளுநர்...

வெடுக்குநாறியில் கைதானவர்கள் கொழும்பில் முறைப்பாடு

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.   வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரியின்...

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணி அளவீட்டு பணிகள் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது...

ரெலோவின் 11வது தேசிய மாநாடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது.  கட்சியின் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து...

யாழில். நான்கு நாட்களாக தொடர்ந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும்,...

காந்தி தேசமே உன் நீதி எங்கே ? யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில்...

தமிழர் தாயகத்தில் பெளத்தமயமாக்கலை முன்னெடுக்க உதவ வேண்டாம்

தமிழ் கலாசார இனவழிப்புக்காக பெளத்தமயமாக்கலை ஆயுதமாக்குதல்!!தமிழர் தாயகத்தில் பெளத்தமயமாக்கலை முன்னெடுக்க உதவ வேண்டாம்இந்துக்களின் சிறப்பு மிக்க புனித நாளான மகா சிவராத்திரியன்று வவுனியா மாவட்டத்திலுள்ள வெடுக்குநாரி இந்து ஆலயத்தில் தமிழ்ப் பக்தர்கள் மீது சிறீலங்கா பொலிஸ் வன்முறையை இம்மாதம் எட்டாம் திகதி கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஆலயம் அமைந்துள்ள வடகிழக்கானது வரலாற்று ரீதியாக இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களான தமிழர்களின் தாயக பிரதேசம் ஆகும். சிறீலங்கா பொலிஸானது எட்டுப் பேரைக் கைது செய்துள்ளதுதலைமுறைகளாக தமிழ்ப் பக்தர்களின் வழிபாட்டிடமாக வெடுக்குநாறி இந்து ஆலயம் இருந்து வருகின்றது. சிறீலங்கா தேசத்தின் நடவடிக்கையானது அடிப்படை உரிமையொன்றான இந்துக்களின் வழிபாடு செய்யும் உரிமையை மிக மோசமாக மீறுகிறது. “பக்தர்களின் கைதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது. பெளத்தத்த மதத்தை பலப்படுத்துவதற்காக சிறீலங்காவுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு நிதியும் இந்து மதத்தையும் , ஏனைய மதங்களையும் நலிவற்றத்தாக்குவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது என உறுதிமொழி வழங்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.தொல்லியல் அடையாளங்களை பாதுகாத்தல் என்ற போர்வையின் கீழ் தமிழ் அடையாளங்களை அழித்தலில் யுத்தத்தின் பின்னர் சிறீலங்கா அரசானது களமிறங்கியுள்ளது. தொல்லியல் சட்டமானது எந்தவொரு வரலாறு, சமூக மற்றும விஞ்ஞான ஆராய்ச்சி இல்லாமல் எந்தவொரு இடத்தையும் தொல்லியல் தளமாகப் பிரகடனப்படுத்த தொல்லியலுக்கு பொறுப்பாகவுள்ள அமைச்சருக்கு அதிகாரத்தை வழங்குகிறது. வரலாற்று ரீதியிலான தமிழர் தாயகமான சிறீலங்காவின் வடகிழக்கு பகுதியில் ஏறத்தாழ 1,500 இடங்களை பெளத்த இடங்களாக அடையாளப்படுத்த சிங்கள பெளத்த பேரினவாதம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. தமிழர் தாயகத்தில் 1970களில் இவ்வாறான ஏறத்தாழ 2,000 நிலையங்களை அடையாளங்காண சிங்கள பேரினவாதி அமைச்சர் சிரில் மத்தியூ திட்டமிட்டிருந்ததை நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.தமிழர் பகுதிகளில் குடியேற்றத்தை மேற்கொள்ள, தமிழ் மரபை, தமிழ் அடையாளத்தை அழித்து கலாசார இனவழிப்பை மேற்கொள்ள பெளத்த இடங்களை ஆய்தமாக்க சிங்கள பெளத்த பேரினவாதம் பாவிக்கிறது. பெளத்த இடத்தை அடையாளப்படுத்தல், காப்பாளரொருவராக சிங்களப் பிக்கு ஒருவரை நியமித்தல், இடத்தைப் பாதுகாப்பதற்கு சிங்கள இராணுவத்தை தரையிறக்கல் தொடர்ந்து சிங்கள விவசாயிகள் குடியேறுதல் என்பன சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சி நிரல் ஆகும். இந்த நிகழ்ச்சி நிரலே அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர்மலையிலும் நிறைவேற்றப்பட்டிருந்தது.பெளத்தத்தை முன்னெடுப்பதற்கு சிறீலங்காவுக்கு 15 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை கடந்தாண்டு நவம்பரில் இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தது. 1987 இந்திய – சிறீலங்கா ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் “பெளத்த தடங்களை அடையாளங்காண” அல்லது மீளமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் நன்கொடையானது பயன்படுத்தப்படமாட்டாதென உறுதிப்படுத்தும்படி இந்திய அரசாங்கத்தை நாங்கள் வேண்டுகிறோம்.சிறீலங்காவின் வடகிழக்கு பகுதி சிங்கள மயமாக்கலைத் தடுப்பது அறஞ்சார் கட்டாயம் மட்டுமின்றி, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்குக் கட்டாயமும் ஆகும். பிரதமர் பணிமனை,நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.pmo@tgte.org-- Shanthini Sivaraman, Minister of Media, TGTE, 416-830-4305 media.team@tgte.org

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்

இந்திய கடற்தொழிலாளர்களின்  அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின்...

வெடுக்குநாறிமலையில் கைதான 08 பேரும் விடுதலை.

வெடுக்குநாறிமலையில்  கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளை,...

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை யாழில் போராட்டம்

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை...

தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் கருத்து கூறினார் என லலீசன் மீது குற்றச்சாட்டு

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் ச. லலீசனுக்கு எதிராக புலனாய்வு துறையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம்...

வெடுக்குநாறி விவகாரம் – ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.  யாழ்ப்பாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில்...

உக்ரைனுக்கான டோரஸ் ஏவுகணைகளை வழங்க யேர்மன் நாடாளுமன்றம் எதிர்ப்பு

 உக்ரைக்னுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும்  டோரஸ் ஏவுகணைகளை அனுப்புவதற்கு யேர்மனியின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதற்கு எதிராக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக...

யாழ்.பல்கலையின் 38ஆவது பொது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில்  இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியது.  பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி....

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ...

வெடுக்குநாறியில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் உணவு தவிர்ப்பு

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , வவுனியா நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 08 பேரில்...

35வருடங்களின் பின்னர் விடுவிப்பு!

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தெற்கு -தென்மயிலை (J240) கிராம சேவையாளர் பிரிவில் உள்ள...