உக்ரைனுக்கான டோரஸ் ஏவுகணைகளை வழங்க யேர்மன் நாடாளுமன்றம் எதிர்ப்பு
உக்ரைக்னுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும் டோரஸ் ஏவுகணைகளை அனுப்புவதற்கு யேர்மனியின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதற்கு எதிராக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) நீண்ட தூர ஆயுத அமைப்பை „உடனடியாக“ பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.
வாக்கெடுப்பில் பங்கேற்ற 690 சட்டமன்ற உறுப்பினர்களில் 495 பேர் எதிராகவும் 190 ஆதரவாகவும் வாக்களிளத்தனர். 5 பேர் வாக்களிக்கவில்லை