யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராக கறுப்பு கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவபீட வளாகத்தில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் பன்னிரண்டாயிரம் பணியார்கள் தங்களுடைய சம்பள முரண்பாடு மற்றும் நீண்ட காலமாகத் தீர்த்து வைக்கப்படாத பிரச்சினைகள் பலவற்றைத் தீர்க்கக்கோரி நாடளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நேரத்தில், பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கட்டமொன்றைக் கோலாகலமாகத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert