Juni 16, 2024

கிளிநொச்சியில் முன்னணி களமிறங்கியது!

வலிகாமம் வடக்கின் தையிட்டியில் விகாரை அமைத்து ஆக்கிரமித்துள்ள படையினரை வெளியேற்ற போராடிவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கிளிநொச்சி – சந்திரன் பூங்காவை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக மே18ம் திகதி முதல் போராட்டத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்துள்ள தமிழ் தேசய மக்கள் முன்னணியினர் பாதுகாப்பு படையினரது கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று செவ்வாய்கிழமையும் (21) போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மண்ணின் சொத்தான சந்திரன் பூங்காவை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து முகாமிட்டுள்ளனர். பூங்காவை விட்டு இராணுவத்தினர் வெளியேறுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தலைமையிலான கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதனையடுத்து அப்பகுதியில் இலங்கை காவல்துறையினர் களமிறக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அவர்கள் முயற்சித்தனர்.

போராட்டகாரர்கள் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இன்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றிருந்தனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert