Mai 3, 2024

ரஷ்ய போர் விமானங்கள் ஆறு உக்ரைனால் அழிப்பு

ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு விமானத் தளத்தில் ஆறு ரஷ்ய விமானங்களை அழித்ததாகக் உக்ரைன் கூறுகிறது.

இத்தாக்குதலில் மேலும் எட்டு விமானங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன எனவும் 20 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் உக்ரைன் கூறியது.

Morozovsk தளத்தில் உக்ரைனில் முன் வரிசையில் பயன்படுத்தப்படும் Su-27 மற்றும் Su-34 விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தாகக் கூறப்படுகுிறது.

விமானநிலைய தாக்குதல் குறித்து ரஷ்யாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

உக்ரைன் எல்லையை ஒட்டிய பகுதியில் 40க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் தாக்கப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சரடோவ், குர்ஸ்க், பெல்கோரோட் மற்றும் கிராஸ்னோடர் பகுதிகளும் குறிவைக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. 

Rostov’s Morozovsk மாவட்டத்தில், ஒரு மின் துணை மின்நிலையம் தாக்கப்பட்டதால், சுமார் 600 பேர் சில மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவித்தனர் என்று Rostov ஆளுநர் Vasily Golubev தனது டெலிகிராம் சேனலில் தெரிவித்தார். அத்துடன் 16 மாடி குடியிருப்புக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உக்ரைன் சமீபத்தில் ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகள் மீது ட்ரோன் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது, இராணுவ மற்றும் எரிசக்தி வசதிகளை குறிவைத்து.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert