Mai 8, 2024

தீவகமும் விற்பனையில்!

இலங்கையின் வடபுலத்தினை சுருட்டுவதில் இந்திய அரசு மும்முரமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில்  கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் 11 மில்லியன் அமெரிக்க டொலர் முழு நிதி மானியத்தின் கீழ், நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவில் மார்ச் 2025க்குள் கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பைப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கையின் மன்னார் பகுதியில் அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர அந்நாட்டு அரசு அமைப்புகள் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உள்ளிட்ட ஆய்வுகள் அனைத்தும் அதானி நிறுவனத்திற்கு சாதகமாக நடத்தப்பட்டு அறிக்கை கொடுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

உலகிலேயே பறவைகள் இடம்பெயர்ந்து செல்லும் முக்கியமான எட்டு இடங்களில், தெற்கு ஆசிய மார்க்கத்தின் சொர்க்கமாக இலங்கை திகழ்கிறது. பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கடந்து, சுமார் 30 நாடுகளில் இடம்பெயர்ந்து இந்த பறவைகள் இலங்கைக்கு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் ஒன்றரை கோடி பறவைகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கைக்குள் பறவைகள் பிரவேசிக்கும் பிரதான மார்க்கமாக மன்னார் உள்ளது.

இந்நிலையில், புலம்பெயர் பறவைகள் இலங்கைக்குள் வராத காலங்களில், அரசு நிறுவனங்கள் அறிவியல்பூர்வமற்ற சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து, அதானி கிரீன் எனர்ஜி சிறீPலங்கா நிறுவனத்திற்கு, கற்றாலை மின்உற்பத்தி திட்டத்தை வழங்குவதற்கு தயாராகி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert