Mai 3, 2024

யாழ்.சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் , அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்க பல்வேறு தரப்புக்களும் தீர்மானித்து உள்ளன. 

வலி.வடக்கு பிரதேசத்தில் இன்னமும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உயர் பாதுகாப்பு  வலயமாக காணப்படும் நிலையில் , காணிகளை விடுவிக்குமாறு, காணி உரிமையாளர்களால் பல வருடங்களாக கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருவதுடன் , காணி விடுவிப்பு போராட்டங்களையும் பல்வேறு தடவைகள் முன்னெடுத்துள்ளனர். 

இந்நிலையில் , யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு என 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

அதில் , விடுவிக்கப்பட்டு , மக்கள் மீள் குடியேறிய காணிகளையும் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குரும்பசிட்டி , கட்டுவான் மற்றும் குப்பிளான் வடக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள காணிகளும் சுவீகரிக்கப்படவுள்ளன. அதில் மக்கள் மீள் குடியேறியுள்ள காணிகளும் உள்ளடங்கியுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பில் , அந்த கிராம அமைப்புக்கள் அண்மையில் கூடி ஆராய்ந்து , தமது காணிகளை சுவீகரிக்கும் திட்டங்களை முன்னெடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என , முதல் கட்டமாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுப்பது என தீர்மானித்துள்ளனர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert