சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த சதி

சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக்கு அண்மையில் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இருந்து அரசாங்கம் பாடம் கற்றுக்கொண்டுள்ளது.  ஆகவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்.

எனவே அப்பாவி மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் அல்லது சம்பவத்திற்கும் அரசாங்கம் இடமளிக்காது என மேலும் தெரிவித்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert