Mai 11, 2024

திருகோணமலை ஊடகவியலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதி யான உலர் உணவு பொதி 40 வழங்கப்பட்டது.

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் புத்தாண்டை முன்னிட்டு அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) இன்று காலை 10 மணிக்கு அகம் மனிதாபிமான வள நிலைய மண்டபத்தில் வைத்து திருகோணமலை மாவட்ட 40 ஊடகவியலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதி யான உலர் உணவு பொதி 40 ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர் தகவல் சரியான முறையில் செல்லவேண்டும் அதற்கு மாவட்டம் என்ற ரீதியில் அனைத்து ஊடகங்களிலும் செய்தி செல்லவேண்டும் அதற்கு நிகழ்வுகள் நடைபெறும் களத்தில் நின்று அதற்கான தகவல் பெற்று கொள்ள வேண்டும். நிகழ்வுகளுக்கு அழைக்கப்படும் போது ஊடகவியலாளர்களின் பங்களிப்பு கூடுதலாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள் அத்துடன் திருகோணமலையில் மூன்று இன மக்கள் வாழ்கின்ற நிலையில் எமது பணி மக்களையும் அரச அரசார்பற்ற அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர் மட்டத்தில் இணைந்த வேலைத்திட்டமாக உள்ளது என்று அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) மாவட்ட இணைப்பாளர் கே.லவகுகராஜா, இணைப்பாளர் தெரிவித்தார்
இந்த நிகழ்வில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு.அத்தநாயக்க, அரசாங்கத் தகவல் உத்தியோகத்தர் எஸ்.எம்.ரஷின், அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) மாவட்ட இணைப்பாளர் கே.லவகுகராஜா, இணைப்பாளர் அழகராஜா மதன், கள இணைப்பாளர் திரு.இஸ்மியா ஆகியோர் கலந்துகொண்டு குறிப்பிட்ட தக்கது. திருமலை சூரியா

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert