Mai 3, 2024

இந்திய மீனவருக்கு அனுமதி:தமிழக தேர்தல் அறிவிப்பு!

 

இலங்கை கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதிக்கும் அறிவிப்பு தமிழக தேர்தலை முன்னிட்டதொரு அறிவிப்பேயென தெரிவித்துள்ளார் சுரேஸ்பிறேமசந்திரன்.

இத்தகைய திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தற்போது கடற்றொழில் அமைச்சகம் இந்திய அரசுடன் கலந்துரையாடி வருவதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

எமது கடற்பகுதியில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டி,வந்து மீன்பிடிக்கின்றனர். அடுத்து இழுவை மடிவலைகள் மூலம் நமது கடல் படுக்கை மட்டம் வரை கடல்வளத்தை அள்ளிச் சென்று சூறையாடுகின்றனர்.

எனவே இந்த சிக்கல்களைத் தீர்க்க வாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இந்திய படகுகளுக்கு இங்கு மீன் பிடிக்க உரிமம் வழங்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிந்துள்ளோம் ”என்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்திருந்தார்;.

டக்ளஸி;ன் கருத்து தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஸ்பிறேமச்சந்திரன் தமிழக தேர்தலை முன்னிட்டு வெளியிடப்படும் இத்தகைய பரபரப்பு செய்திகள் தேர்தல் முடிந்த பின்னர் கிடப்பில் போடப்பட்டுவிடுவது வழமையென தெரிவித்தார்.