தமிழ் திரையுலகில் பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜயகுமார். அவரின் வாரிசுகளும் சினிமாவில் இருக்கிறார்கள்.

விஜய குமாருக்கு மஞ்சுளா, முத்துக்கண்ணு என இரண்டு மனைவிகள். இவர்களுக்கு அனிதா, கவிதா, அருண் விஜய், வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என மகன், மகள்கள் இருக்கின்றனர்.

இதில் அனிதா என்பவரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சினிமாவில் இவர் முகம் காட்டவில்லை. இவரின் மகள் தான் தியா. தற்போது தியாவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.