März 28, 2025

கவினுடன் ஜோடியாக இணைந்த மற்றொரு பிகில் பட நடிகை..!!

பிக் பாஸ் மூலம் புகழ் பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் கவின்.

பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே ரவிதரன் தயாரிப்பில் ஒரு படம் நடித்திருந்தார் கவின்.

இதன்பின் தற்போது லிப்ட் எனும் படத்தில் கதநாயகனாக கமிட்டாகி யுள்ளர் கவின்.

இப்படத்தில் தளபதி விஜய்யின் பிகில்

படத்தில் நடித்திருந்த நடிகை அமிர்தா அய்யர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் இதற்கு முன் காளி, படைவீரன் எனும் படங்களில் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிட்தக்கது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் மற்றொரு பிகில் பட பிரபலம் இணைத்துள்ளார்.

ஆம் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் மாரி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை காயத்திரி ரெட்டி தான் தற்போது லிப்ட் படத்தில் இணைந்துள்ளார்.

இதனை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.