September 9, 2024

துயர் பகிர்தல் திரு வேலுப்பிள்ளை சின்னராசா

திரு வேலுப்பிள்ளை சின்னராசா

(MLT- Jaffna Teaching Hospital)

தோற்றம்: 28 பெப்ரவரி 1932 – மறைவு: 28 மே 2020

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னராசா அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று வல்வெட்டியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காந்தி அம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வசீகரன், மனோகரன், பிரபாகரன், பாஸ்கரன், கருணாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகந்தி, லலிதா, விஜி, சுஜாதா, ரோசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(ஆசிரியர்), திருமதி. மார்க்கண்டு, சின்னத்தம்பி, சுப்பிரமணியம் மற்றும் தவமணி ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசன், மகேசன், காலஞ்சென்றவர்களான விமலாதேவி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோஜா, தினேஸ், லாவண்யா, ரோசினி, வருஷ்னா, யாழிகா, பிரணவன், ஜசீவன், பவித்திரன், அட்சகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஸ்விகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2020 வியாழக்கிழமை அன்று வல்வெட்டியில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
வசீகரன் – மகன் Mobile : +1 718 725 0156   
மனோகரன் – மகன் Mobile : +44 790 092 2571  Mobile : +44 795 758 2096   
பிரபாகரன் – மகன் Mobile : +1 647 283 7492   
பாஸ்கரன் – மகன் Mobile : +44 778 988 7124   
கருணாகரன் – மகன் Mobile : +94 77 662 4401