Juli 27, 2024

சின்னத்திரை பிரபலம் விபத்தில் பலி!

சின்னத்திரை பிரபலம் விபத்தில் பலி!

சின்னத்திரை நடிகையும், பிரபல மாடலுமான மெபினா மைக்கெல் காரில் சென்றபோது ஏற்பட்ட கோர விபத்தில் மரணமடைந்துள்ளார்.

கர்நாடகத்தின் கூர்க் பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கெல். பிரபல கன்னட தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றவர். தற்போது மாடலாக இருந்து வரும் இவர் தனது சொந்த ஊரான கூர்க் அருகேயுள்ள மடிக்கேரி பகுதிக்கு தனது தோழிகளுடன் காரில் சென்றுள்ளார்.