கவின் காதலை பற்றி பதிலடி கொடுத்த லாஸ்லியா..!

கவின் காதலை பற்றி பதிலடி கொடுத்த லாஸ்லியா..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் சினிமாவில் நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடனேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் ஆசைப்படியே தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டும் இன்றி, நடிகர் ஆரிக்கு ஜோடியாக பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இன்னும் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர் அதில் ஒருவராக பிக் பாஸ் அபிராமியும் நடிக்கிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அடிக்கடி தன்னுடைய அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நரகத்திற்கு சென்றாலும் அங்கு ராணியாகவே இருக்க ஆசைப்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.