September 9, 2024

கொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்!

கொரோன வைரஸ் COVID-19ன் அறிகுறி தென்படுவதற்கு முன்பே, கிருமித்தொற்றுக்கு ஆளானவரை அடையாளம் காண பிரிட்டன் மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

 சீக்கிரமாகவும், உடலில் சோதனைக் கருவி எதையும் செலுத்தாமலும் கிருமித்தொற்றுக்கு ஆளானவரைக் கண்டறிய அந்த முயற்சி மேற்கொள்ளப்படவிருக்கிறது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 19 நோயாளிகளின் உடல் வாடை மாதிரியைக் கொண்டு ஆறு நாய்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும், அந்தச் சோதனை வெற்றியடைந்தால், ஒரு மணி நேரத்தில் 250 பேர் வரை ஒரு நாயால் அடையாளம் காணமுடியும் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்காவிலும் பிரான்சிலும் ஏற்கனவே இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சில வகைப் புற்றுநோய்கள், நரம்பு மண்டலத்தைப் படிப்படியாகப் பாதிக்கும் பார்க்கின்சன், மலேரியா போன்ற நோயாளிகளைக் கண்டறிய நாய்களுக்கு இதற்கு முன்னர் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கின்றன எனவே இவ்வாறு நோய்க்கு ஆளாகும் சாத்தியமுள்ளவர்களை நாய்கள் அடையாளம் காண்பது புதிதல்ல என்பது குறிப்பிடத்தகது/