April 19, 2024

கொரோனாவிற்கு தயாரான தடுப்பூசி..!!வெளியிட காத்திருக்கும் நாடு.!

கொரோனாவிற்கு தயாரான தடுப்பூசி..!!வெளியிட காத்திருக்கும் நாடு.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சுமார் 212 நாடுகளுக்கு பரவியது. இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு கூடுதல் மருத்துவ கவனிப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தனிமைப்படுத்தவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்ட மருந்துகள் நல்ல பலனை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து நல்ல பலனை அளித்துள்ளதாகவும், கொரோனா நுரையீரலை மிகவும் தீவிரமாக தாக்கும் தன்மை கொண்டுள்ளது என்றாலும், குரங்குகளின் உடலில் மருந்துகளை செலுத்தியதால், நுரையீரல் பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கவிளைவுகள் ஏதும் ஏற்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால், கொரோனா தடுப்பூசியில் முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளதாகவும், மனிதர்களிடம் முழுமையாக சோதிக்காத வகையில் மருந்தின் தன்மை உறுதி செய்ய இது என்றும், அடுத்த மாதத்தின் இறுதிக்குள் இம்மருந்து மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு முடிவுகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைப்போன்று சோதனைகள் அடுத்தடுத்து வெற்றியடையும் பட்சத்தில் பிரிட்டனில் இருக்கும் 30 மில்லியன் மக்களுக்கு வரும் செப்டம்பர் மாதத்தில் மருந்துகளை வெளியிடுவோம் என்று அந்நாட்டின் வர்த்தக துறை மந்திரி தெரிவித்துள்ளார்.