September 9, 2024

சிறீதரனிற்கு மீண்டும் விசாரணை?

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோரை விசாரணைக்காக இலங்கை காவல்துறையினர்  அழைத்துள்ளனர்.
கடந்த மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினத்தன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய மகளிர் தின நிகழ்வுகள் பசுமைப்பூங்கா வளாகத்தில் நடத்தப்பட்டிருந்தது.
அந்நிகழ்வில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படங்கள் தொடர்பில், கொக்காவில் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.முறைப்பாட்டையடுத்து கடந்த மார்ச்13 ஆம் திகதியன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
விசாரணை நடைபெற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அதே விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைக்காக நாளை வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நிலையத்துக்குச் சமூகமளிக்குமறிக்குமாறு இன்று (14) இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டு சந்திரன் பூங்கா என பேணப்பட்ட நகர பூங்கா இலங்கை படைகளது போர் வெற்றி சின்ன பிரதேசமாக கோத்தபாய ராஜபக்ஸவினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.