März 29, 2024

2ம் நாள்: நவாலி தேவாலயத்தில் நினைவேந்தல்?

இனப்படுகொலைவாரத்தின் இரண்டாம் நாள் நினைவஞ்சலி நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் முன்பதாக இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இலங்கை காவல்துறையினரது கெடுபிடிகள் மத்தியில் பொதுச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
1995 ஜூலை 9 அம் திகதி முன்னேறிப்பாய்தல் இராணுவநடவடிக்கையின் போது நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயம் நவாலி முருக மூர்த்தி தேவாலயம் மீதும் இலங்கை விமான்பபடை குண்டு வீசியதில் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் ஏறத்தாழ 150 பேரை கொன்றிருந்தார்கள்.
நவாலி படுகொலை தூபி முன்பதாக இன்றைய தினம் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தலின் போது பங்கெடுத்தவர்களை கொரோனா தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பபோவதாக காவல்துறை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.