உலகின் மிகச்சிறிய தீயணைப்பு வீரர்!

உலகின் மிகச்சிறிய தீயணைப்பு வீரர்!

உலகின் மிக குள்ளமான தீயணைப்பு வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்த  வின்ஸ் பிராஸ்கோவை.

27 வயதான வின்ஸ் பிராஸ்கோ உடற்கட்டழகனாகவும் உள்ளார்.

4 அடி 1 அங்குலம் உயரமான இவர், பிறக்கும்போதே அகோண்ட்ரோபிளாசியா என்ற மரபணு குறைப்பாட்டுடன் பிறந்திருந்தார். இதனால் இளமைக்காலத்தில் பாடசாலையில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான இவர், மனம் தளராமல் தன்னை நிரூபிக்க வேண்டுமென போராடியுள்ளார்.

உலகில் தன்னை அடையாளப்படுத்த சிறந்த வழியாக உடற்கட்டழகு துறையை தெரிவு செய்தார். நீண்ட பயிற்சியின் பின்னர், அமெரிக்காவில் உள்ளூர் மட்டத்தில் பல உடற்கட்டழகு போட்டிகளில் கலந்து கொண்டார்.

எட்டு வருட தீவிர பயிற்சியின் பின்னர் உடற்கட்டழகன் போட்டிகளில் கலந்து கொள்கிறார். மினி ஹல்க் என்று அவரை செல்லப்பெயரால் அழைக்கிறார்கள்.

பின்னர் தீயணைப்பு துறையில் இணைந்து, முழுநேர பணியாளராக செயற்பட்டு வருகிறார்.

உடற்கட்டழகு பயிற்சிகளில் ஈடுபட்டதால் பொருட்களை தூக்குவதில் தனக்கு எந்த சிரமமும் இல்லை, மற்றையவர்கள் என்ன செய்கிறார்களோ, அது அத்தனையையும் தானும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

2016 பிட்ஸ்பர்க் புரோ போட்டியில் bantam weight class இல் 2ஆம் இடத்தை பெற்றிருந்தார்.

தற்போது உலகின் மிகச்சிறிய தீயணைப்பு வீரர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தமானவராக இருக்கிறார்.